GATE 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முடங்கிய வலைதளம்- மாணவர்கள் அதிர்ச்சி!
GATE 2025 Registration: கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
![GATE 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முடங்கிய வலைதளம்- மாணவர்கள் அதிர்ச்சி! GATE 2025 Registration Begins Today Website Down Know Details GATE 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முடங்கிய வலைதளம்- மாணவர்கள் அதிர்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/f395d0c8c6a7e4ca13bdff45fa51cead1724833078913332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொறியியல் முதுகலைப் படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான வலைதளம் முடங்கியுள்ளது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் முதுகலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, கேட் என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.
ஐஐடி ரூர்க்கி நடத்தும் தேர்வு
ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது.
இந்த நிலையில் ஐஐடி ரூர்க்கி, 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வு தேதி, விண்ணப்பப் பதிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு, பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேரவும் கேட் தேர்வு மதிப்பெண் உதவுகிறது.
கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதம் கேட் தேர்வு
கேட் தேர்வு 2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
முந்தைய ஆண்டுகளின் கேட் தேர்வு வினாத்தாள்களை அறிய
https://drive.google.com/drive/folders/1KIP49ld707wFmvWkQ2JeQU-ypwb2Pzpk என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தேர்வு முறை எப்படி?
3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.
எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)