IAS Exam Training | உதவித்தொகையுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாடு அரசு மையங்கள் சார்பில் படிக்க இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோர் டிசம்பர் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2022-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குப் படிக்க, தமிழ்நாடு அரசு மையங்கள் சார்பில், ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் மற்றும் சென்னை, கோவையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பயிற்சி மையத்தில் 225 முழு நேரத் தேர்வர்களும், 100 பகுதி நேரத் தேர்வர்களும் பயிற்சி பெறலாம். அவர்களுக்கு உதவித் தொகை, இலவச தங்கும் வசதி, சத்தான உணவு, தரமான நூலகம், காற்றோட்டமான வகுப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை, மதுரை மையங்களில் தலா 100 முழுநேரத் தேர்வர்கள் பயிற்சி பெற முடியும்.
அரசின் இலவசப் பயிற்சியைப் பெற விரும்பும் தமிழக மாணவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி டிசம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Maternity Leave for Students | கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை
பயிற்சி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளன.
இந்தப் பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்காக முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.