Maternity Leave for Students | கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
எம்.பில்., பி.எச்டி. படிப்புகளைப் படித்துவரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் படிப்புக் காலத்தின்போது 240 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கலாம்.
கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’யுஜிசி சட்டம் 2016-ன் படி, எம்.பில்., பி.எச்டி. படிப்புகளைப் படித்துவரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் படிப்புக் காலத்தின்போது 240 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கலாம்.
இதுதவிர்த்து, அனைத்து உயர் கல்வி நிலையங்களும் தங்களின் நிறுவனங்கள், கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பை வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தேர்வுக் கால சலுகைகள், வருகைப் பதிவேடுகளில் சலுகைகள் வழங்கிட ஏதுவாகவும் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பைப் படிக்கும் மாணவிகளுக்குத் தேவை கருதி பிற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்’’.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Frame Rules For Granting Maternity Leave: UGC To VCs.. pic.twitter.com/J634QjTM0x
— Ramani Prabha Devi | க.சே.ரமணி பிரபா தேவி (@ramaniprabadevi) December 15, 2021
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.