மேலும் அறிய

Ambedkar Law University: ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இதோ முழு விவரமும்..

ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். 

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

’’தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப்பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 12.07.2022 முதல்‌ 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த நிகழ்வினை சட்டம்‌, நீதிமன்றங்கள்‌, சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ ஊழல்‌ தடுப்புச்‌ சட்டத்‌ துறை அமைச்சர்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தர்‌ எஸ்‌.ரகுபதி இன்று (12.07.2022) காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைத்தார்.

மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும்‌ முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்‌ தேதிகள்‌ பல்கலைக்கழக இணையதளத்தில்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்.‌"

இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ தெரிவித்துள்ளார்.

Ambedkar Law University: ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இதோ முழு விவரமும்..

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளுக்கும் இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி ஆகும். 

அதேபோல தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகிய இடங்களில் பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் இன்று முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/ 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

JEE Main 2022: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்; எப்படி? https://tamil.abplive.com/education/jee-main-2022-session-2-application-date-deadline-extended-check-important-dates-and-other-details-60844

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget