ESLC EXAM: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம்- எங்கு? எப்போது?
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? இதோ பார்க்கலாம்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்
ஆகஸ்ட் 2025-ல் நடைபெறவு உள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 10.07.2025 பிற்பகல் முதல் 17.07.2025 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். 01.08.2025 அன்று 12 % வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
- தேர்வுக் கட்டண விவரம்
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/-மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தட்கல் விண்ணப்பப் பதிவு
மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 18.07.2025 மற்றும் 19.07.2025 ஆகிய நாட்களில் (இரண்டு நாட்கள்) தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத் தொகையான ரூ.500/- ஐ கூடுதலாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை
* முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பள்ளி பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் எதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
* எற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/ சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் ரூ.42/- க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- இத்தேர்விற்கான விரிவான தகவல்கள் Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு கால அட்டவணை

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.





















