மேலும் அறிய
Advertisement
Employment Guidance: 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டல்- அரசு முக்கிய உத்தரவு
வேலை வாய்ப்புகள் குறித்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்க வழிகாட்ட நாளை பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது.
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் விரும்பும் வேலை வாய்ப்புகள் குறித்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்க வழிகாட்ட நாளை பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் (ஜூலை 2023) அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 19.07.2023 புதன்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட சிறப்புக் கூட்டப் பொருள்
வழிமுறைகள்:
1) நாளை (19.07.2023) நடைபெற இருக்கும் சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்வதை தலைமையாசிரியர் உறுதிசெய்ய அறிவுறுத்தவேண்டும்.
2) பெற்றோர் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் நாளன்று பள்ளிக்கு வரவழைக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடிதம் மூலமாகவும், குரல்வழி செய்தி (Voice Blast) மூலமாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
3 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்கள் மற்றும் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் துணையோடு பெற்றோர் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்கள் விவரங்களை இருப்பிட வாரியாக தொகுத்து அதன் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களை கூட்ட நாளன்று கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்க வேண்டும் என்று சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகைதரும் மாணவர்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள், சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் எடுத்துக்கூற அறிவுறுத்தவேண்டும்.
5) அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள், சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் மாநில அலுவலகத்திலிருந்து காணொலி வடிவில் பகிரப்படும்.
6) கூட்டத்தில் பங்குகொள்ளாத மாணவர்களின் விவரங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்களிடம் கொடுத்து, மாணவர்களை நேரடியாக அவர்களின் இல்லங்களில் சந்தித்து தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர ஊக்கப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
7) ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இணைய வழியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் விண்ணப்பிக்க உதவப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கி வேண்டும்.
8) மாணவர்களின் விபரங்களை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு அளித்து அவர்களைக் கொண்டும் மாணவர்கள் இணைய வழியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் விண்ணப்பிக்க தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.
9) கூட்டத்தில் பங்குகொள்ளாத மாணவர்களின் விவரங்களை தங்கள் பகுதியில் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து, மாணவர்களை நேரடியாக அவர்களின் இல்லங்களில் சந்தித்து தொமிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர ஊக்கப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
10) பள்ளித் தலைமையாசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாணவர்களின்விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் தொகுத்து மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அவர்களிடம் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிற வழிகாட்டுதல்கள்
1) மாவட்டக் கள அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றிப் இச்சிறப்புக் கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்.
2) இச்சிறப்புக் கூட்டமானது மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் உயர்கல்வி சார்ந்த மிக முக்கியமான கூட்டம் என்பதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion