கல்வி வளர்ச்சி நாள்; கட்டுரை, ரீல்ஸ், வீடியோ எடுத்து அனுப்ப அழைப்பு- சிறப்பு பரிசுகள்!
இத்திருநாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி தொடர்பான போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் முதலியவை நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு கலைப் போட்டிகளை நடத்துகிறது. இப்போட்டிகளில் இன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் கல்விக் கண் திறந்த காமராசர். அவர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என கலைஞர் 2006ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளிகளில் "கல்வி வளர்ச்சி நாள்" கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து, மாணவர்களிடம் கல்வி குறித்து விழிப்புணர்வை வளர்க்கவும், அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்திடவும் கல்வி வளர்ச்சி நாள் ஒரு நாள் வாய்ப்பாக அமைகிறது.
கல்வி தொடர்பான போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள்
இத்திருநாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி தொடர்பான போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் முதலியவை நடத்தப்படுகின்றன.
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக கீழ்க்கண்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் தற்போது பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
அமைச்சர் வழங்கும் சான்றிதழ், பதக்கங்கள்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு நேரில் வாழ்த்துகள் கூறி, பாராட்டுச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்குவார்கள்.
போட்டிகளும் அதன் விவரங்களும் பின்வருமாறு;-
தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கான போட்டிகள்
- என் பள்ளி என் பார்வையில்
- என் பள்ளியை நான் விரும்ப காரணங்கள்,
- என் பள்ளியில் ஒரு நாள்
- என்னை மாற்றிய ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்.
இந்த மூன்று தலைப்புகளில் எதாவது ஒன்றில் கட்டுரை 1 பக்க அளவில் (அ) வீடியோ ரீல்ஸ் ஒரு நிமிடம் என்ற அளவில் எடுத்து அனுப்ப வேண்டும்.
- நான் என் பள்ளியின் பேச்சாளன்
- இல்லம் தேடி கல்வி
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
போன்ற திட்டங்களைப் பற்றி ரீல்ஸ், வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
- என் பள்ளி என் கலை
மாணவர்கள்,
- தங்களின் கனவுப் பள்ளி
- தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
- கரும்பலகை முதல் கணினி காட்சிப் பலகை வரை மாறிவரும் கல்வியின் முகம்
என்ற ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியம் வரைந்து அனுப்ப வேண்டும்.
- என் கதை என் எழுத்தில்
- எனக்குப் பிடித்த ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ;
- தமிழ்நாடு கல்வியில் எவ்வாறு முதன்மையில் உள்ளது?
என்ற தலைப்பில் கதை (அ) கட்டுரை 1 பக்க அளவில் எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும்.
முன்னாள் மாணவர்களுக்கான போட்டிகள்
- என் பள்ளி என் நினைவு
உங்கள் வாழ்க்கையை உங்கள் பள்ளி எவ்வாறு மாற்றியது என்பதை 1 பக்க அளவில் கட்டுரை (அ) ரீல்ஸ் ஒரு நிமிடம் அளவில் எடுத்து அனுப்ப வேண்டும்.
- பள்ளிக்கூடம் வந்தேனே?
- நீங்கள் படித்த பள்ளி
- உங்களுக்கு பிடித்த ஆசிரியர்
செல்ஃபி (அ) வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
- என் அன்பான ஆசிரியை, ஆசான்-
எனக்கு பிடித்த ஆசிரியர்
என்ற தலைப்பில் ரீல்ஸ் அல்லது ஒரு பக்க அளவில் கடிதம் எழுதி பிடிஎஃப் கோப்புகளாக எடுத்து அனுப்ப வேண்டும்.
- கல்விக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள்;
- நான் முதல்வன்
- காலை உணவுக்கிட்டம்
- இல்லம் தேடி கல்வித்திட்டம்
- எண்ணும் எழுத்தும்
போன்ற திட்டங்களைப் பற்றி ரீல்ஸ், வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கான போட்டிகள்
- என் முன்னெடுப்புகள்- ரீல்ஸ்
உங்கள் பள்ளியில் நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து ரீல்ஸ் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளைக் கீழ்கண்ட க்யூஆர் கோட்டில் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கலாம். அல்லது tndiprmhmsmp@gmail.com என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.























