![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Education scholarship: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தி.மலை ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
![Education scholarship: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தி.மலை ஆட்சியர் அறிவிப்பு Education scholarship Backward students can apply for in Tiruvannamalai dist - TNN Education scholarship: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தி.மலை ஆட்சியர் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/69442080793567d37e6ffedaf8d5bd631708001697485113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பிவ) மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை, பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம்
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-,இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verfication செய்யவேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்பட துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை மாணாக்கர்கள் 29. 02. 2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)