மேலும் அறிய
Advertisement
பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை : 10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வரும் 10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு/ அரசு உதவிபெறும் / அண்ணாமலை பல்கலைகழகம் / அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2021-22ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கத் தேவையான நெறிமுறைகள்:
- விண்ணப்பிக்கும் முறை : tnlea.com/www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்வது தொடங்கும் நாள் 10.8.2021. முடிவுறும் நாள் 30.8.2021
- பதிவுக்கட்டணம் : பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பாங்கிங் வாயிலாகவும் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக பதிவுக்கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் “ The secretary, second year B.E./ B.Tech. Degree Admissions -2021-22, ACGCET, Karaikudi” payable at karaikudi என்ற பெயரில் 10.8.2021 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக்கட்டணமாக தமிழ்நாடு பொறியியில் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
- SC / SC(A) / ST பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் செலுத்த அவசியமில்லை.
- விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை ( TFCs) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மையங்களிலும் போதியளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு பி.இ./ பி.டெக். பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்படும்.
- மேலும் விவரங்களுக்கு INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கவும்.
- மேலும், தொடர்புக்கு 04565-230801, 224528 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion