(Source: ECI/ABP News/ABP Majha)
இணைய வழி வகுப்பு பயன்பாட்டுக்காக மாணவர்களுக்கு கையடக்க கணினி - கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி வகுப்பு பயன்பாட்டுக்காக 30 மாணவர்களுக்கு கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட வசதியோடு 10-ம் வகுப்பில் 80 மாணவ, மாணவிகளும், பனிரெண்டாம் வகுப்பில் 120 மாணவ, மாணவிகளும் பயலுகின்றனர்.இவர்களின் இணைய வழி வகுப்பு மற்றும் தேர்வு பயன்பாட்டுக்காக கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 30 கையடக்க கணினியை வழங்கினார். ஏற்கனவே 63 கையடக்க கணினியை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக முப்பது கையடக்க கணையியல் வழங்கப்பட்டுள்ளன மீதமுள்ள மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்;
இந்த அரசு மாதிரி பள்ளியில் கடந்த ஆண்டு 40 மாணவர்கள் 40 மாணவிகள் என மொத்தம் 80 நபர்கள் பயின்றனர். அவர்கள் தேர்ச்சி பெற்று இப்போது முன்னணி கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு தொடர வேண்டும், மாணவர்கள் தேர்வுக்கு இப்போதிலிருந்த தயாராக வேண்டும், மாணவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் தான் இருக்க வேண்டும், ஆசிரியர்கள் இப்போதில் இருந்தே மாணவர்கள் தேர்வு எப்படி எழுத வேண்டும், தேர்வு எழுதுவது எப்படி என்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், பொது தேர்வு போன்று மாணவர்களுக்கு வினாத்தாள்கள் மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கி மூன்று மணி நேரம் மாதிரி தேர்வு நடத்த வேண்டும், அப்போது தான் மாணவர்கள் பொதுத் தேர்வில் எளிமையாக தேர்வு எழுதுவார்கள் என்றும், இங்குள்ள அனைத்து மாணவர்களும் தங்களுடைய குடும்பத்தை விட்டு இங்கு வந்து பயின்று வருகின்றனர்.
நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் வறுமையை மட்டும் தான் நினைத்து நன்றாக பயில வேண்டும், மற்றவர்கள் பற்றி பேசுவதோ நினைப்பதோ பற்றி எதுவும் இருக்கக் கூடாது என்றும் உங்களுடைய அனைத்து கவனங்களும் பாடத்தை படித்து வாழ்க்கையில் வெற்றியை ஏற்படுத்திக் கொண்டும் தங்களுடைய குடும்பத்தின் கஷ்டத்தை நீக்குவதை பற்றியும் தான் உங்களுடைய மனதில் இருக்க வேண்டும் என்றார். அதனைத்தொடர்ந்து மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து தேவைகளையும், தங்கும் வசதி, கழிப்பிட வசதி, உணவுகளின் தரம் பற்றியும் மாணவ, மாணவிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். எந்த தேவைகள் இருந்தாலும் கேளுங்கள். தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.