Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
Student Scholarship: மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், அரசு. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ மற்றும் மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI-stmatric Scholarship) திட்டம், கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கல்வி உதவித்தொகை - நிபந்தனை என்ன.?
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொறிழ்படிப்பு) முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமாணம் ரூ.2.50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
2025-2026 ஆம் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவ/மணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) orader speub http://umis.in.gov.in/ step peuh விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) http://umis.tn.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணாக்கர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31:122025 ஆகும்.
மேலும், கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.





















