சென்னை பள்ளிகளில் முக்கிய அறிவிப்பு! தீபாவளி விடுமுறைக்குப் பின் புதிய மாற்றம்: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு செவ்வாய்க் கிழமை பாடவேளை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளதாவது:
’’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21.10.2025 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 25.10.2025 அன்று (சனிக்கிழமை) பணிநாட்களாக செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி
அதன்படி, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது’’.
இவ்வாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார்.
விடுமுறை கோரிக்கை
முன்னதாக தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. சனி, ஞாயிற்றுக் கிழமை விடுமுறையோடு, திங்கள் கிழமை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க் கிழமை விடுமுறை தேவைப்படும். அப்போதுதான் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாடிவிட்டு, சென்னை மாதிரியான நகரங்களுக்கு திரும்ப முடியும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதை அடுத்து, தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















