மேலும் அறிய

GATE 2024: பொறியியல் கேட் தேர்வு; விண்ணப்பங்களைத் திருத்த இன்றே கடைசி!

பொறியியல் நுழைவுத் தேர்வான GATE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்றே (நவ.24) கடைசித் தேதி ஆகும்.

பொறியியல் நுழைவுத் தேர்வான GATE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்றே (நவ.24) கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆகஸ்டில் தொடங்கிய விண்ணப்பப் பதிவு

2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை ஐஐஎஸ்சி பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், கால அவகாசம் அக்.12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 20ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2024ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கிடையே மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் நீட்டிக்கப்பட்டு, மாணவர்கள் இன்று (நவ.24) வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?

கேட் தேர்வு இந்தியா முழுவதும் பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி அன்று அனுமதிச் சீட்டு வெளியாகும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்கள் 

நாடு முழுவதும் இந்தியாவுக்குள் மட்டுமே கேட் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வை நடத்தும் ஐஐஎஸ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வர்கள், இந்தியாவுக்கு வந்து தேர்வை எழுதலாம். எனினும் போக்குவரத்து, தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்களை செய்துகொள்ள வேண்டும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து விரிவாக அறிய https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்ன தகுதி என்று மாணவர்கள் இங்கே https://gate2024.iisc.ac.in/eligibility-criteria/ தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தொலைபேசி எண்: 080 2293 2644 / 3333

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget