CBSE Board Exams: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ - முழு அட்டவணை இதோ
CBSE Board Exams 2025-26: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

CBSE Board Exams 2025-26: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளன.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2025-26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின்படி, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்க உள்ளன. 10ம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெற உள்ள சூழலில், 12ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி வரை தொடர உள்ளது. தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளன. காலை அமர்வில் 10:30 மணிக்கும், பிற்பகல் அமர்வில் 1:30 மணிக்கும் தேர்வு தொடங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு:
புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு இணங்க, 2026 ஆம் ஆண்டு முதல், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை எழுதுவார்கள் என்று CBSE அறிவித்துள்ளது. பள்ளிகளும், மாணவர்களும் தேர்வுக்கு தயாராகும் விதமாக, செப்டம்பர் 24, 2025 அன்று ஒரு தற்காலிக தேதிப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் தங்கள் பாட சேர்க்கைத் தரவைச் சமர்ப்பித்த பிறகு, தேர்வுகளுக்கு 110 நாட்களுக்கு முன்பு இறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை:
| நாள் / தேதி | நேரம் | பாடக் குறியீடு | பொருள் |
|---|---|---|---|
| செவ்வாய், 17 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 041 / 241 | கணிதம் (தரநிலை / அடிப்படை) |
| புதன், 18 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 064 - | மனையியல் |
| வெள்ளிக்கிழமை, 20 பிப்ரவரி | காலை 10:30 – மதியம் 12:30 | 407, 412, 415, 416, 418, 419 | அழகு & ஆரோக்கியம்; மார்கெட்டிங் & சேல்ஸ்; மல்டிமீடியா; மல்டி-ஸ்கில் ஃபவுண்டேஷன்; உடல் செயல்பாடு பயிற்சியாளர்; டேட்டா சயின்ஸ் |
| சனி, 21 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 101 / 184 | ஆங்கிலம் (தொடர்பு / மொழி & இலக்கியம்) |
| திங்கள், 23 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 003–011, 089 | உருது, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு |
| புதன், 25 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 086 - | அறிவியல் |
| வியாழன், 26 பிப்ரவரி | காலை 10:30 – மதியம் 12:30 | 401–422 | ரிடெய்ல்; பாதுகாப்பு; தானியங்கி; வங்கி; சுகாதாரப் பராமரிப்பு.. etc |
| வெள்ளிக்கிழமை, 27 பிப்ரவரி | காலை 10:30 – மதியம் 12:30 | 165, 402, 417 | கணினி பயன்பாடுகள்; ஐடி; செயற்கை நுண்ணறிவு |
| திங்கள், 2 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 002/085 | இந்தி (பாடப்பிரிவு A / B) |
| சனி, 7 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 087 - | சமூக அறிவியல் |
| செவ்வாய், 10 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 018 தமிழ் | ஃப்ரெஞ்ச் |
12ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை
| நாள் / தேதி | நேரம் | பாடக் குறியீடு | பொருள் |
|---|---|---|---|
| செவ்வாய், 17 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 045, 066 | உயிரி தொழில்நுட்பம்; தொழில்முனைவு |
| புதன், 18 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 048 | உடற்கல்வி |
| வெள்ளிக்கிழமை, 20 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 042 | இயற்பியல் |
| சனி, 28 பிப்ரவரி | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 043 | வேதியியல் |
| வியாழன், 12 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 001, 301 | ஆங்கிலம் (தேர்வு / கோர்) |
| திங்கள், 16 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 002, 302 | இந்தி (தேர்வு / கோர்) |
| புதன், 18 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 030 | பொருளாதாரம் |
| திங்கள், 23 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 028 | அரசியல் அறிவியல் |
| புதன், 25 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 065, 083 | தகவலியல் பயிற்சிகள்; கணினி அறிவியல் |
| வியாழன், 27 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 044 | உயிரியல் |
| சனி, 28 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 054 | வணிக ஆய்வுகள் |
| திங்கள், 30 மார்ச் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 027 | வரலாறு |
| சனி, 4 ஏப்ரல் | காலை 10:30 – பிற்பகல் 01:30 | 039 | சமூகவியல் |
| வியாழன், 9 ஏப்ரல் | காலை 10:30 – மதியம் 12:30 | 821, 829, 844 | மல்டிமீடியா; ஜவுளி வடிவமைப்பு; தரவு அறிவியல் |





















