CBSE Datesheet 2025: சிபிஎஸ்இ 45 லட்சம் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; 10, 12 பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!
CBSE Datesheet 2025 Date: பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளை 45 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 204 பாடங்களுக்கு, இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேதி வாரியாக தேர்வுகள் விவரம்
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
விடைத்தாள் திருத்தம் எப்போது?
அதேபோல விடைத்தாள் திருத்தும் பணிகள், பொதுத் தேர்வு நடைபெற்றதில் இருந்து 10 நாட்களில் தொடங்கும். 12 நாட்களுக்கு உள்ளாக முடிக்கப்படும். உதாரணத்துக்கு 12ஆம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று வைத்துக் கொண்டால், அதைத் திருத்தும் பணிகள், மார்ச் 3ஆம் தேதி தொடங்கும். விடைத்தாள் திருத்தம் தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதிக்குள் முடியும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு எப்படி?
முன்னதாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றது. இந்த மாணவர்களுக்கு பொதுவாக மே மாதத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது நினைவுகூரத் தக்கது.






















