CBSE Compartment Result 2023: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 50% தாண்டாத தேர்ச்சி- பார்ப்பது எப்படி?
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு முடிவுகள் (Compartment Result) வெளியாகி உள்ளன.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு முடிவுகள் (Compartment Result) வெளியாகி உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கம்பார்ட்மென்ட் எனப்படும் துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல முக்கியப் பாடங்களில் தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 17 முதல் 22ஆம் தேதி வரை சி.பி.எஸ்.இ. துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த துணைத் தேர்வில் மாணவிகள் 46,907 பேர், மாணவர்கள் 80,715 என மொத்தம் 1,27,622 பேர் பங்கேற்றனர். இதில், 52.3 சதவீத மாணவர்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்ச்சி பெற்றுளனர்.
துணைத் தேர்வு தேர்ச்சி விகிதம்
மாணவர்கள் : 80,715 - 53.80 % தேர்ச்சி
மாணவிகள் : 21415 - 50.80 % தேர்ச்சி
மொத்தம் : 46,907 - 49.90 % தேர்ச்சி
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை
மாணவர்கள் : 14318
மாணவிகள் : 7239
மொத்தம் : 21557
எப்படி பார்ப்பது?
ஆகிய இணையதள முகவரி இணைப்பை க்ளிக் செய்து மாணவர்கள் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
ஸ்டெட்- பை - ஸ்டெப் வழிமுறை
* முதலில் https://results.cbse.nic.in/ - அதிகாரப்பூர்வ இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில், பதிவு எண் (Roll number), பள்ளியின் பெயர், அட்மிட் கார்டு ஐடி (Admit card ID) ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
* தேவையான தகவல்களை பதிவு செய்து சப்மிட் செய்தால் முடிவுகள் கிடைக்கும்.
* அதேபோல https://cbseresults.nic.in/Class_X_2023_Compartment_as_234/Class10th23Compart.htm என்ற இணைப்பையும் க்ளிக் செய்து காணலாம்.
2023- 24-ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு தேதி
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2023- 24-ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.
சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறும்போது, வேறு ஏதேனும் தேர்வுகளை நடத்தும் அனைத்து முகமைகளும் மேற்குறிப்பிட்ட தேர்வு அட்டவணையைக் கருத்தில்கொண்டு, தங்களின் தேர்வுகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
தேர்வு அட்டவணை குறித்த பட்டியல், ஏஐசிடிஇ, இந்தியத் தேர்தல் ஆணையம், தேசியத் தேர்வுகள் முகமை, யூபிஎஸ்சி, பல்கலைக்கழக மானியக் குழு, எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.