மேலும் அறிய

CAT 2023 Answer Key: விரைவில் வெளியாகும் கேட் தேர்வுக்கான விடைக் குறிப்பு; பதிவிறக்கம் செய்வது எப்படி?

கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில், மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் அரசு கல்வி கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில், மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. 

முன்னதாக முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கேட் 2023-க்கான அனுமதிச் சீட்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் கேட் தேர்வின் உத்தேச விடைக் குறிப்பு, டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3 கட்டங்களாகத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற்றது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் 3ஆம் கட்டத் தேர்வு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற்றது. தேர்வுக்கு 3.28 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2.88 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதாவது சுமார் 88 சதவீதம் அளவுக்கு வருகை பதிவானது. 

தேர்வு முறை எப்படி?

3 வகைமைகளில் கேட் தேர்வு நடைபெற்றது. வாய்மொழித் திறன் மற்றும் வாசிப்பு புரிதல் (VARC), தரவு விளக்கம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் (DILR) மற்றும் அளவு திறன் (QA) ஆகியவற்றில் தேர்வு நடைபெற்றது.  

விடைக் குறிப்பைத் தரவிறக்கம் செய்வது எப்படி?

* தேர்வர்கள் iimcat.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* அதில், CAT answer key 2023 என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.

* யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிடவும்.

* CAT 2023 answer key PDF தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

* கேட் தேர்வு விடைகளைச் சரிபார்த்து, ஆட்சேபனை இருந்தால் தேசியத் தேர்வுகள் முகமையிடம் தெரிவிக்கலாம். 

யாருக்கு எங்கே இடம் கிடைக்க வாய்ப்பு?

ஐஐஎம் மற்றும் மதிப்பெண்கள் வரிசையில், 

ஐஐஎம் அகமாதாபாத்

99-100

ஐஐஎம் பெங்களூரு

99-100

ஐஐஎம் கொல்கத்தா

99 

ஐஐஎம் லக்னோ

97-98

ஐஐஎம் இந்தூர்

97-98

கூடுதல் விவரங்களுக்கு: https://iimcat.ac.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget