மேலும் அறிய

Group 4 Result 2023: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!

TNPSC Group 4 Result 2023: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.

7,382 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் 84 சதவீதம் பேர் தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியாக இருக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நட்த்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும். எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னா விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால் அவகாசம் தேவைப்படுகிறது விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தோவர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம். என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குரூப் 4 தேர்வு முடிவுகள்: 

ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மூலம் அரசுப் பணிக்குத் தேர்வர்களைத் தேர்ந்தெடுக்கும் குரூப் 4 தேர்வு 7,301 பணியிடங்களுக்காக நடைபெற்றது.  எழுத்துத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தொடர்ந்து 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இந்தநிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு :

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதற்காக கடந்த ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  

இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், வழக்கம்போல் பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் நடைபெற்றது. தலைநகர் சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.

குரூப் 4 தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயங்கின.

விண்ணப்பித்த 21.8 லட்சம் தேர்வர்களில், 18.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, 84 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Embed widget