மேலும் அறிய

தொடங்கிய இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை; விண்ணப்பிப்பது எப்படி?

BNYS Course Admission: யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்ப விநியோகம் தொடக்கம் 

அரும்பாக்கம், செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 17 தனியார் கல்லூரிகளில் 993 இளநிலை அரசு ஒதுக்கீடு இடங்களும் 557 நிர்வாக இதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. 

இயற்கை வைத்தியம், இயற்கை உணவு என இயற்கை தொடர்பான படிப்புகள் மாணவர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. உடல்நலத்தை மேம்படுத்துதல், நோய்வரமால் தடுத்தல், நோய் வந்த பின்னர் சரி செய்தல் இழந்த சக்தியை மீண்டும் பெறச் செய்திடன் உள்ளிட்டவை இயற்கையான முறையில் செய்யப்படும் மருத்துவமாகும். 

பி.என்.ஒய்.எஸ். என்பது அதாவது ’Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)’ (பேச்சுலர் ஆஃப் நேச்சுரோபது அண்ட் யோகிக் சயின்ஸ்) என் பெயரில் 5 ஆண்டுகால பட்டப்படிப்பாகும்.

இந்தப் படிப்பு சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் உள்ளது. இதில் சேர்வதற்கு ப்ளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 

இந்தப் படிப்பில் முதலாம் ஆண்டு, உடல் கூறு இயல், உடல் செயலியல், உயிரிவேதியல், இரண்டாம் ஆண்டு யோகாநுண்ணுயிரியியல், நோயியல், உளவியல், இயற்கை நோய்அறிதல், நவீன நோய்அறிதல், மருந்தியல், மூன்றாம் ஆண்டு  தடயஅறிவியல், சமூக மருத்துவம், மகட்பேறு மருத்துவம், வாசனை மருத்துவம், யோகா மருத்துவம், மஜாஜ், அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, வண்ண மருத்துவம், நீர்சிகிச்சை, உணவு சிகிச்சை, உபவாச சிகிச்சை, இயற்கை முறை மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.

பின்னர் கடைசி ஆறு மாத காலம், மருத்துவப் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியைக் கல்லூரியிலும் பெறலாம். அரசு மருத்துவமனைகளிலும் பெறலாம்.

2023-2024-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு & அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (5 ½ ஆண்டுகள்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான (விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, https://www.tnhealth.tn.gov.in/  என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள்., கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.500 செலுத்த் வேண்டும். பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு  விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. 

https://www.onlinesbi.sbi/ - என்ற இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

”செயலாளர், தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம்,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,

அரும்பாக்கம்,

சென்னை-600 106”என்ற முகவரிக்கு 14.08.2023 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:14.08.2023 மாலை 5.00 மணி வரை

 


மேலும் வாசிக்க..

https://tamil.abplive.com/entertainment/fahadh-faasil-became-a-caste-leader-netizens-celebrating-mamannan-ratnavelu-character-131873

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget