Best Science Teacher Award: சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: கணக்கு, புவியியல், வேளாண் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்- விவரம் இதோ!
அறிவியல் நகரத்தின் 2022- 2023ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அறிவியல் நகரத்தின் 2022- 2023ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணக்கு, புவியியல், வேளாண் ஆசிரியர்களும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை எடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாக்குவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018- 2019ஆம் ஆண்டு முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி வருகிறது.
தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இதில் ஐந்து ஆசிரியர்கள் தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்தும் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் திறந்தநிலைப் பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பின்வரும் ஐந்து துறைகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. கணிதம்
2. இயற்பியல்
3. வேதியியல்
4. உயிரியல் மற்றும்
5. புவியியல் /கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள்
விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் முறையான வழியாக அனுப்பப்பட வேண்டும், அதாவது சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு அறிவியல் நகர அலுவலகத்திற்கு 14.09.2023 அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.sciencecitychennai.in
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய
*
ஊரக கண்டுபிடிப்பாளர் விருது
அறிவியல் ஆசிரியர் விருதுடன், தமிழக அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
அறிவியல் நகரம் 2018-2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது ஊரகப் புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு
தலா ரூ. 1,00,000/-(ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.