Anna University: டிகிரி சான்றிதழ் உள்ளிட்ட பலவற்றிற்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்
Anna University Revised Certificate Fees: அண்ணா பல்கலைக் கழகம் பல சான்றிதழ்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் சில சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள புதிய கட்டணங்களின் படி டிகிரி மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு முன்பாக 300 ரூபாய் என்று இருந்தது. அந்தக் கட்டணம் தற்போது 1000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல மாதிரி டிகிரி சான்றிதழ் பெற இருந்த 1000 ரூபாய் கட்டணம் தற்போது 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்