Anna University New Syllabus: பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்: தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உட்பட 5 பாடங்கள் அறிமுகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக, தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உட்பட 5 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக 20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது.
தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொழில் துறையினரின் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக விளக்கமளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் பொறியியல் பாடத்திட்டம், நடப்பு கல்வியாண்டு முதல் அமலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழிற் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது.
புதிதாக அறிமுகம் செய்யும் திறன் சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க, 150 தொழில் நிபுணர்களின் உதவி கோரப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உட்பட 5 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில், தமிழர் மரபு (Scientific Thoughts in Tamil), அறிவியல் தமிழ் (Heritage of Tamils) ஆகிய துறைகளில் எழுத்துத் தேர்வுகளும் Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய துறைகளில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
துறை வாரியாக மாற்றப்பட்ட பாடத்திட்டங்களை விரிவாகக் காண: https://cac.annauniv.edu/PhpProject1/aidetails/ai_ug_cands_2021ft.html