மேலும் அறிய

AICTE Scholarship: கல்லூரி மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவிக்கொகை; அள்ளித்தரும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி?

சாக்‌ஷம் என்பது உயர் கல்வித்துறை சார்பில் ஏஐசிடிஇ அளிக்கும் கல்வி உதவித்தொகை ஆகும். தொழில்நுட்பக் கல்வி படிக்கும் சிறப்புத் திறன் கொண்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சிறப்புத் திறன் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் உதவித்தொகையை அளிக்கிறது. சாக்‌ஷம் கல்வி உதவித்தொகை என இது அழைக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்னென்ன ஆவணங்கள் அவசியம் என்று பார்க்கலாம்.

சாக்‌ஷம் உதவித்தொகை என்றால் என்ன? (What is the Saksham Scholarship)

சாக்‌ஷம் என்பது உயர் கல்வித்துறை சார்பில் ஏஐசிடிஇ அளிக்கும் கல்வி உதவித்தொகை ஆகும். தொழில்நுட்பக் கல்வி படிக்கும் சிறப்புத் திறன் கொண்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மாற்றுத் திறனாளி மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி என்ன? (Saksham Scholarship 2024 Eligibility Criteria)

  • டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முதல் ஆண்டு அல்லது இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் படிக்க வேண்டியது முக்கியம்.
  • உடலில் 40 சதவீதத்துக்குக் குறைவில்லாமல் மாற்றுத் திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் இருக்கக் கூடாது. அரசு அளிக்கும் செல்லுபடியான வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • கடைசித் தேர்வு மதிப்பெண் பட்டியல்
  • சாதிச் சான்றிதழ்
  • வருமானச் சான்றிதழ்
  • வங்கி பாஸ்புக் (வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்)
  • கல்லூரிக் கட்டண ரசீது எண்
  • பதிவு எண்
  • ஆதார் அட்டை
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply for the Saksham Scholarship 2024)

மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நவம்பர் 30 கடைசித் தேதி ஆகும்.

Step 1: தேசிய உதவித்தொகை மையமான scholarships.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

Step 2:  அதில் தோன்றும் ‘Students‘ என்னும் தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

Step 3: புதிய பயனாளிகளாக இருந்தால், ‘OTR (One Time Registration) எனப்படும் ஒருமுறை விண்ணப்பப் பதிவை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.

Step 4: மீண்டும் முகப்புப் பக்கத்துக்கு வந்து லாகின் செய்து, போதிய விவரங்களை உள்ளிட வேண்டும்.

Step 5: போதிய விவரங்களை உள்ளிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டம் குறித்து முழு விவரங்களை விரிவாக அறிய: https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2013_F.pdf

கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget