மேலும் அறிய

8th Public Exam Hall Ticket: எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு; ஜூலை 31 முதல் ஹால்டிக்கெட்- வெளியான அறிவிப்பு

8th Public Exam Hall Ticket 2023: தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கான அனுமதிச்சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ ஜூலை 31ஆம் தேதி முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம்.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு ஆகஸ்ட்‌ மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்‌ கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ ஜூலை 31ஆம் தேதி முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று தெரிவித்து உள்ளதாவது:

தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு 07.08.2023 முதல்‌ 11.08.2023 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத தேர்வுத்‌ துறையின்‌ சேவை மையங்களில்‌ (Service Centre) ஆன்‌லைன்‌ மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ 31.07.2023 (திங்கள் கிழமை) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in
என்ற இணைய தளத்தின்‌ மூலம்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

பதிவிறக்கம்‌ செய்யும்‌ முறை

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ‌HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால், "ESLC AUGUST 2023 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற தலைப்பு வரும். அதில் உள்ள "DOWNLOAD HALL TICKET" என்ற வாசகத்தினை பேரே செய்து தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ (Application Number) பிறந்த தேதி (Date of birth‌) ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில்‌ தோன்றும்‌. அதனை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

தனி அறிவிப்பு எதுவும் கிடையாது 

மேற்கண்ட‌ தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில்‌ அறிவிப்பு எதும்‌ அனுப்ப இயலாது எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை இதுதான்:

தேதி  கிழமை நேரம்‌ பாடம்‌
07.08.2023 திங்கட்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  தமிழ்‌
08.08.2023 செவ்வாய்‌க்கிழமை‌ காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  ஆங்கிலம்‌
09.08.2023 புதன்‌ கிழமை  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  கணிதம்‌
10.08.2023 வியாழக்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  அறிவியல்‌
11.08.2023 வெள்ளிக்கிழமை‌  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  சமூக அறிவியல்‌

முன்னதாக இந்தத் தேர்வுக்கு, 01.08.2023 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள் ஜூன் 20 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த பின், தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக் கட்டணம்‌ ரூ.70/- என மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாகச் செலுத்தினர்.

இந்நிலையில் தேர்வுக்‌ கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ ஜூலை 31ஆம் தேதி முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Embed widget