12th Exam: நீலகிரியில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..
நீலகிரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 156 மாணவர்களும், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகளும், 23 ஆயிரத்து 747 பேர் தனித்தேர்வர்களும், மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், திருநங்கைகள் 6 பேரும், சிறை கைதிகள் 90 பேரும் தேர்வை எழுதினர்.
ஏப்ரல் 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவு பெற்றது. வருகிற 10ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சாம்ராஜ் அரசு பள்ளியில் கணித பொதுத்தேர்வில் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அங்கு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமிராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின் ஆசிரியர்கள் 5 பேர் காப்பி அடிக்க மாணவர்களுக்கு உதவி செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அந்த 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.