மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்ததால் விஷம் கொடுத்து மாமனாரை கொன்ற மருமகள் கைது
மகளாக பார்க்கவேண்டிய மாமனார், மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்த மாமனாருக்கு மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்ததால் விஷம் கொடுத்து மாமனாரை கொன்ற மருமகள் கைது Woman arrested for poisoning father-in-law in Ramanathapuram மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்ததால் விஷம் கொடுத்து மாமனாரை கொன்ற மருமகள் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/eea126c383976edf47b22d5d85cca498_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள 'கேளல்' கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி, வினோபராஜ், கோமதி என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில், கோபால் மற்றும் கோமதி ஆகிய இருவரும் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவரது மகன் வினோபாராஜுக்கும் , கனிமொழிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைற்றது. ஆனால், இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக மகனுக்கும் மருமகளுக்கும் மருத்துவ ரீதியாக தீர்வு காண வேண்டிய முருகேசனின் மனதில் காமப்பேய் ஆட்கொண்டது. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு மருகள் சம்மதிப்பாள் என்ற எண்ணத்தில், வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மருமகள் அதற்கு சம்மதித்தாக தெரியவில்லை. ஆனால் அடிமேல் அடி கொடுத்தால் அம்மியும் நகரும் என்ற நப்பாசையில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
![மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்ததால் விஷம் கொடுத்து மாமனாரை கொன்ற மருமகள் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/7e8968d8535a2c8698b616a828f3358d_original.jpg)
இதையடுத்து, மருமகள் கனிமொழி தனது கணவர் வினோபா ராஜனிடம் உங்கள் தந்தை என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். ஆனால் என் தந்தை அப்படிப்பட்டவர் இல்லை அவர் மிகவும் நல்லவர் உன் பார்வைக்கு அவர் தவறாக தெரிகிறார் என தன் தந்தையை பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்ட மகன் அதை நம்ப மறுத்துள்ளார். இந்நிலையில், மருமகள் கனிமொழிக்கு மாமனார் முருகேசன் பாலியல் ரீதியா தொந்தரவு கொடுத்து வந்ததால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜூலை 29ஆம் தேதி மதியம் முருகேசனுக்கு சாப்பாட்டை தட்டில் போட்டு வைத்துவிட்டு அவர் சாப்பிடும் குழம்பில் எலி மருந்து மற்றும் குருணை மருந்தை யாருக்கும் தெரியாமல் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதைச் சாப்பிட்ட முருகேசன் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள அபிராமம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அவர் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த சாப்பாட்டை கீழே கொட்டியபோது அதைத்தின்ற சில கோழிகள் இறந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதனை யாரும் அப்போதைக்கு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். ஆனால், முருகேசனுக்கு உடல்ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டார். ஆனால், ஆத்திரம் அடங்காத அவரது மருமகள் கனிமொழி மறுநாள் ஜூலை முப்பதாம் தேதி இரவு மீண்டும் சாப்பாட்டில் மீண்டும் விஷம் கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிடும்போது ஏதோ மருந்து வாசனை வருவதாக அவரது மருமகன் முருகனிடம் முருகேசன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அந்த உணவை சாப்பிட்ட அவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஜூலை 30ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தைக்கு உணவில் விஷம் கலந்து வைத்து பாதிப்பு ஏற்பட்ட விஷயம் அவரது மகன் வினோபாராஜ்க்கு தெரியாத நிலையில், தனது தந்தைக்கு வயிற்றுவலி என்ற அடிப்படையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். உயிரிழந்த முருகேசனின் உடல் வழக்கமான சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு கேளல் கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து முருகேசன் வீட்டைச்சுற்றி கோழிகள் இறந்தது கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வினோபா ராஜ் அவரது மனைவி கனிமொழியிடம் கேட்டபோது அப்பொழுது கனிமொழி நான் தான் குழம்பில் விஷம் வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டார்.
இதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வினோபாராஜ் தனது தந்தைக்கு விஷம் வைத்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தியதில் முருகேசனின் மருமகள் கனிமொழி அவரது மாமனாருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாமனாரை சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கனிமொழியை நிலக்கோட்டை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். மருமகளை, மகளாக பார்க்கவேண்டிய மாமனார், மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்த மாமனாருக்கு மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)