மேலும் அறிய

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(60). இவருடைய மனைவி கோமதி(48). குமரவேல் வேலை எதவும் செய்யவில்லை . மனைவி கோமதி,  வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  20 வயது இளம் மகள், கல்லூரியில் பயின்று வருகின்றார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதேபோல்,  கடந்த 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கணவன்-மனைவி இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. சண்டை ஓய்ந்ததும், கோமதியும் அவரது மகளும் உறங்கச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் குமரவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி சண்டை முற்றிய நிலையில் , கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கோமதியை குமரவேல் மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோமதி , கணவர் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி பதில் தாக்குதல் நடித்தியதில், குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். 

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

இது சம்பந்தமாக வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கோமதியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கோமதி அளித்துள்ள வாக்குமூலத்தில், "கணவர் குமரவேல், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மது போதையில் என்னிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஒவ்வொரு இரவும் கடந்து செல்வது எனக்கு நரகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில், தடுமாற்றத்துடன் சுயநினைவு இழந்த நிலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னிடம் வேண்டுமென்றே தகராறு செய்தவர்.  ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருந்த காய்வெட்டும் கத்தியை எடுத்து வெட்டினார். எனக்கு நெற்றி தலை பகுதியில் வெட்டு விழுந்தது. என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினேன். 

கத்தியோடு மிரட்டிய கணவன்... கதையை முடித்த மனைவி... எப்.ஐ.ஆர்.,யில் போலீஸ் கொடுத்த சலுகை!

ஆனாலும், என்னுடைய கணவர் என்னை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை திருப்பி தாக்கினேன். அப்போது எதிர் பாரத விதமாக அவரது கழுத்தில் வெட்டு விழுந்ததால் என் கண் முன்னரே இறந்துவிட்டார். குடியால் தான் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாக ஆனது,’’ என்று கோமதி வாக்குமூலம் அளித்தார்.

கோமதிக்கு கணவனை கொலை செய்யவேண்டும் என்கிற நோக்கம் இல்லாததால், இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவு,2ன் கீழ் கொலையாகாத மரணம் என்கிற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் கோமதியை வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget