மேலும் அறிய
Advertisement
Crime: கணவனை கொன்ற மனைவி; இயற்கை மரணம் என நாடகமாடியது அம்பலம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டு பேரை வேப்பூர் போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது மனைவி தீபா இவர்களுக்கு ஒரு மகன் புஷ்பநாதன் (17) 12ம் வகுப்பு படிக்கிறார். ஒரு மகள் கலைவாணி(15) பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த எட்டு மாதம் முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார்.
வீட்டில் இருந்த ஆறுமுகம் கடந்த 7-ம் தேதி இறந்ததாக கூறப்படுகிறது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகம் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் ஆறுமுகம் தானாக இறக்கவில்லை. அவரை கழுத்து நெரித்து கொலை செய்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததது. இதனால் தீவிர விசாரணையை மேற்கொண்ட வேப்பூர் போலீசார் ஆறுமுகம் மனைவி தீபாவிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
ஆறுமுகம் தீபா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி தீபா மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தீபா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த 6-ம் தேதி இரவு ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட தீபா மற்றும் அவரது மகன் புஷ்பநாதன், மகள் கலைவாணி 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஆறுமுகம் இயற்கையாக மரணம் அடைந்தார் என நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் தீபா மற்றும் அவரது பிள்ளைகள் புஷ்பநாதன், கலைவாணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion