![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் 6 நாட்கள் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
![விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் Virudhunagar physical abuse case 5 days court custody for 4 persons விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/59ff64f179ed228178110c72b9e1e98a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் 6 நாட்கள் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. இந்த நிலையில், 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விருதுநகர் மேல தெருவை சேர்ந்த திமுக நிர்வாகி ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். பால் பண்ணை நடத்தி வரும் ஹரிஹரன் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி உடலுறுவு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்த ஹரிஹரன், தனது நண்பரான திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவிற்கு அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து அந்த பெண் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை பேஸ்புக், வாட்ஸாப்பில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி ஜுனைத்தும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வீடியோவை வைத்து மிரட்டி 8 நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 9ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என்பது தான் மிக துயரமான விஷயம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களும் விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் முடிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பேசினார். அப்போது பேசிய அவர், விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருந்தார்.
#BREAKING | விருதுநகரில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #TNAssembly #MKStalin #TNGovt #virudhunagar pic.twitter.com/gpyicG8aop
— ABP Nadu (@abpnadu) March 23, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)