Crime : கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பில் ஈடுபடுட்ட இரண்டு பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் கரு கலைப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரிஷிவந்தியம் அருகில் உள்ள கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், சின்னதம்பி மனைவி செல்வி(30). இவர் கர்ப்பமாக இருந்தபோது, கரு வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையெடுத்து, அவர் கருவை கலைக்க முடிவெடுத்துள்ளார்.
இந்நில்லையில், கீழ்பாடி கிராமத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர், மதுரை ஆலம்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி முத்துகுமாரி. இவரும், உதவியாளர் கவிதா என்பவரும் பிப்ரவரி,22 ஆம் தேதி இரவு செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில், செல்விக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். கருகலைப்பில் ஈடுபட்ட முத்துகுமாரி, கவிதா ஆகியோர் இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க,கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும்.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவைக் கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்கள் என்னவெனில், (இதில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் சம்பந்தப்பட்ட கர்ப்பிணியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டவை. மற்றபடி, ஒரு பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான நபர் உட்பட குடும்ப உறுப்பினர் யாரும் இதில் தலையிடப்போவதில்லை. ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைவானவர் என்றால், பாதுகாவலர் அல்லது பெற்றோரிடம் ஒப்புதல் கேட்கப்படும்):
கருவின் காரணமாக ஒரு பெண்ணின் உடலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவது.
பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பம்.
திட்டமிடப்படாத கர்ப்பம் என கர்ப்பிணி கூறும் சூழ்நிலை (சம்பந்தப்பட்ட பெண் உறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்தியப் பின்னரும் கரு உருவாகியிருந்து, அது தனக்கு மனரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஒரு பெண் கருதும் சூழல் ஏற்படுமாயின்.)
கருவின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்படும் சூழல்.
Crime : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்