Cylinder Price Hike: பெட்ரோல், டீசலை விலையை அடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு... கவலையில் மக்கள்
5 மாதங்களுக்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 967.50 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
சமையில் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மார்ச் மாதத்திற்கான புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 967.50 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது.
14.2 kg Domestic cooking gas LPG price hiked by Rs 50 per cylinder. Will now cost Rs 949.50 effective from today: Sources pic.twitter.com/jYvh0RWZG5
— ANI (@ANI) March 22, 2022
பொதுமக்களின் சம்பளத்தில் பெரும்பான்மையான தொகை சமையல் சிலிண்டருக்கே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுனங்கள் தினசரி மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் சமையல் எரிவாயு விலை மாதத்துக்கு இருமுறை மட்டுமே மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.
தற்போது நாடுமுழுவதும் 27.76 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் 97 சதவீத அளவுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் 1.5 கோடி நுகர்வோருக்கு, சர்வதேச சந்தை விலையின் மாறுபாடுகளுக்கு இணங்க எண்ணெய் நிறுவனங்கள் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கின்றன. மீதமுள்ள 26.12 கோடி நுகர்வோருக்கான, பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ் கூடுதல் விலைச் சுமையை மானியத் தொகை உயர்வு மூலம் அரசே ஏற்றுக் கொள்கிறது.
ஆனால், கடந்தாண்டு சந்தை விலைக்கும்,மானியமாக வழங்கப்பட்ட சிலிண்டர் விலைக்கும் உள்ள இடைவெளி குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, மத்திய அரசு சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மானியம் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தியது (16 கோடி நுகர்வோர்). சர்வதேச சந்தை விலை குறைந்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலையை சமநிலையில் வைத்திருக்கவே முயற்சிக்கின்றன.
அதே போல, கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137-வது நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்