மேலும் அறிய

நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர். இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய அப்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர்.

பண்ருட்டியில் நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிபாளையத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென்று பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்னை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன்பின்பு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குடும்பத்தில் பிரச்சினை காரணமாக அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண் தெரிவித்தார். மேலும் காயப்பட்டவர் மாணவி என்பதால் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேரில்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

அப்போது மாணவி கூறுகையில்,  “நான் நர்சிங் படித்து வருவதால் மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகள் தேவை என்பதால் கல்லூரி சார்பில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி ஏற்காடு பகுதியில் பயிற்சிக்குச் செல்ல மாணவ மாணவிகள் புறப்பட்டோம். எங்களுடன் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி என்கின்ற நிஷா, நர்சிங் பயிற்சி கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் ஆகியோரும் ஏற்காடிற்கு வந்தார்கள். அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை. மாறாக ஒரு வாடகை ரூம் எடுத்து தங்கிய போது அங்கு என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் பணியாளர்கள் அன்பு பிரேம் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தனர்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

இதையடுத்து மது மயக்கத்தில் மயங்கிய என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ஏற்காட்டில் இருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன். அப்பொழுது என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன். இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார். இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன்” என காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


நர்சிங் மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - மேலும் இருவர் கைது

 

இதனையடுத்து மகளிர் காவல் ஆய்வாளர், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி, தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய நால்வர் மீதும் போஸ்கோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜனவரி 13 அன்று பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய  இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தப்பி ஓடிய டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget