பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரின் 9 வயது மகன் தரணிதரன், ஜெயப்பிரகாஷ் என்பவரின் 7 வயது மகன் விக்னேஸ்வரன், வீரமணி என்பவரின் 4 வயது மகன் வீரன் ஆகியோர் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் ஏரியில் சென்று மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதியில் சிறுவர்கள் சென்றபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர்.
வேலைக்கு சென்ற பெற்றோர்கள் திரும்பி வந்த போது சிறுவர்கள் இல்லாதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர் அப்போது எங்கு தேடியும் சிறுவகள் கிடைக்கவில்லை. மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியதை அப்பகுதி இளைஞர்கள் பார்த்த நிலையில், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டதுடன் உயிருக்கு போராடிய ஒரு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற
https://bit.ly/2TMX27X
இருப்பினும் அக்குழந்தையும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வந்த வெறையூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மூன்று சிறுவர்களின் உடல்களை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டதில் கடந்த சில நாட்கள் முன்பாக பெய்த கன மழையால் குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் தண்ணீர் நிரம்பி உள்ளதால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிறுவர்களை உறவினர்கள் வீட்டில் பாதுக்காப்பான இடத்தில் விட்டு செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.