மேலும் அறிய
Advertisement
சிறுமியை சாலையில் நிறுத்திவிட்டு மதுவாங்க சென்ற தந்தை - பாலியல் தொல்லை தர முயன்றவருக்கு தர்ம அடி
’’போக்சோ சட்டத்தில் கைதான நபர் தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த சுஜீவன் என்பதும், இவர் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது’’
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 11 வயது மகளை சாலையில் நிறுத்தி விட்டு தந்தை மது வாங்க சென்றதால், மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் சாலையில் நின்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தினை சேர்ந்தவர் முனுசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இன்று தனது 11வயது மகளை அழைத்து கொண்டு எட்டயபுரத்தில் காய்கறி மற்றும் பலசரக்கு பொருள்கள் வாங்கி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது முத்துலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடை இருந்து 100 மீட்டர் தொலைவில் இருசக்கர வாகனத்தினை நிறுத்தி விட்டு, தனது 11வயது மகளை அங்கே நிற்குமாறு கூறி வீட்டு சென்றுள்ளார். தனியாக நின்று கொண்டு இருந்த சிறுமியை அப்பகுதி வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென சிறுமியின் வாய், மூக்கு மற்றும் முகத்தினை பொத்தி அருகில் இருந்த ஓடை பகுதிக்கு பாலியல் வன்கொடுமை செய்வதற்காக சென்றுள்ளான். ஆனால் சிறுமி கத்திவிடவே, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் சிறுமியின் தந்தை அழகர்சாமி ஆகியோர் அந்த இளைஞரை விரட்டி சென்று, சிறுமியை காப்பற்ற முயற்சி மேற்கொண்டனர். அவர்களை தாங்கி விட்டு அந்த இளைஞர் சிறுமியை கொண்டு செல்வதில் முனைப்பாக இருந்துள்ளான். இதையெடுத்து அங்கிருந்தவர்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து சிறுமியை மீட்டனர். இதில் சிறுமிக்கும், அவரது தந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையெடுத்து பொது மக்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்த அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் என்பதும், மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுஜீவனை கைது செய்தனர். ஏற்கனவே சுஜீவன் மீது மசார்பட்டி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் மது போதையில் தகராறு செய்தது என 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion