இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
ஆரணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு நபர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படவேடு கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கார்த்திக் வேலையை முடித்து கொண்டு அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் (25) மற்றும் சங்கர் இருவரும் சந்தவாசல் இருந்து ஆரணி நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாகனம் மோதிக்கொண்ட சத்தம் கேட்டு ஓடிவந்தனர். அப்போது ரத்தவெள்ளத்தில் இளைஞர்கள் இருந்ததை கண்டு ஆம்லன்ஸ் விரைந்து வந்து கார்த்திக் பாஸ்கர் மற்றும் சங்கர் ஆகிய மூன்று நபர்களையும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கார்த்திக் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சங்கர் என்பவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த கார்த்திக் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து களம்பூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..
தமிழ்நாட்டில் இந்தியை திணித்தால் பாஜக போராடும் - பாஜக துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்
வாகனம் ஓட்டும் முறைகள்:
இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது ஹெல்மட் அணிவது அவசியம். இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்யகூடாது. வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள். வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது. வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றினால் விபத்து நடைபெறுவதை தவிர்க்கலாம்.