மேலும் அறிய

குடியால் வந்த வினை; உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி - சோகத்தில் கணவனும் தற்கொலை

நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகர் (24) கூலி வேலை செய்யும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த புனிதா (18) என்ற பெண்ணை காதலித்து, குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புனிதா பிரபாகரனின் அண்ணன் மகள் என்றும், புனிதாவிற்கு சித்தப்பா முறை வரும் எனவும் கூறப்படுகிறது. முறை தவறி காதலித்து திருமணம் செய்த இருவரையும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியே வசித்து வந்துள்ளனர், 

மனைவி தூக்கிட்டு தற்கொலை:

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் திசையன்விளை அருகே உள்ள எருமைகுளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். கணவர் பிரபாகருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.  இச்சூழலில் நேற்றும் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி புனிதா மன  விரக்தியில் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் புனிதாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கணவனும் தற்கொலை:

மனைவி இறந்த நிலையில் கணவர் பிரபாகரன்  மனைவி புனிதா இறந்து விட்டதாகவும், தானும் விஷம் குடித்து இறக்கப் போவதாகவும் உவரியில் உள்ள தனது அண்ணனுக்கு போன் செய்து கூறியுள்ளார். இது குறித்து அவரது அண்ணன் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் சொல்ல நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அவரைத் தேடி வந்துள்ளனர். நேற்று இரவு அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை திசையன்விளை - உவரி  புறவழிச்சாலை அருகே சுடுகாட்டுப் பகுதியில் உள்ள தெற்கு ஓடைக்கரை சுடலைமாடசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் ஒருவர் சடலமாக  கிடப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரித்த  போது அவரது உடலுக்கு அருகில் ஒரு செல்போனும், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களும் கிடந்துள்ளது.

பெரும் சோகம்:

தொடர்ந்து நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொலைபேசியில் தெரிவித்த பிரபு என்ற பிரபாகரின் சடலம்தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்த நிலையில் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget