மேலும் அறிய

Marriage Fraud: நான் டாக்டர்.. இல்ல அரசு ஊழியர்.. ரவுண்டு கட்டி 4 பேரை திருமணம் செய்து மோசடி - கேடி லேடி சிக்கியது எப்படி?

Marriage Fraud: சீர்காழியில் திரைப்பட பாணியில் 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Marriage Fraud:  சீர்காழியில் பொய்களை கட்டவிழ்த்து திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் சிக்கியது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

திருமண மோசடி - பெண் கைது

சீர்காழியில் பல்வேறு ஆண்களை ஏமாற்றி அடுத்தடுத்த திருமணம் செய்த இளம் பெண்னை நான்காவது கணவர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் வடிவேலுவின் காமெடி பாணியில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த லட்சுமி? 

மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவர் கிராமத்தில் சேர்ந்தவர் 29 வயதான லட்சுமி. இவர் பழையார் மீனவர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்த நிலையில்,  அவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், ரேணு என்ற மகளுடன் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் உயிரிழந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் அண்ணன் ஜெயக்குமாரின் பராமரிப்பில் தனது மகன் தர்ஷனையும், மகள் ரேணுவை கொடியம்பாளத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிலும் பராமரிப்பில் விட்டு விட்டு தனது மோசடி பணிகளை தொடங்கியுள்ளார்.

அடுத்தடுத்து திருமணங்கள்:

அதன்படி, லட்சுமி கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரிடம் தன்னை செவிலியர் மீரா என அறிமுகம் செய்து கொண்டு காலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, சிதம்பரம், கடலூர், சென்னை என பல்வேறு ஊர்களில் 4 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்று சிதம்பரத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் தனது பெயர் நிஷாந்தினி, தான் MBBS MS படித்துவிட்டு சிதம்பரம் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றிவருவதாக கூறி அவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு, பணி நிமித்தமாக தான் கோயம்புத்தூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். 

நான்காவது திருமணம்

அதனை தொடர்ந்து சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்த சிவசந்திரன் சிதம்பரம் மெடிக்கல் காலேஜில் தனது தாயாரின் சிகிச்சைக்காக சென்ற போது அவரிடம் தான் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிஷாந்தினி எனவும், தனக்கு அம்மா, அப்பா யாரும் இல்லை என கூறி அவருடன் வாட்ஸ்-அப்  உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பேசி பழகி வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிவசந்திரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார். அதனை ஏற்ற சிவசந்திரன், கடந்த ஜனவரி 20 -ம் தேதி நிஷாந்தினியை மணமுடித்துள்ளார்.

சிக்க வைத்த வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

இந்நிலையில் சிவசந்திரன் தனது திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்ததை அவரது நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். லட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்த அவரது நண்பர்கள் இது குறித்து நண்பன் சிவசந்திரனிடம் கூறியதுடன், லட்சமி திருமணம் செய்த இரண்டாவது கணவரையும் அழைத்து வந்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிவசந்திரன் இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி புதுபெண் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த திருமண எண்ணிக்கை நான்கு பேருடன் முடிவடைகிறதா? அல்லது மேலும் இது அதிகாரிக்குமா என்பது காவல்துறையினரின் அடுத்து அடுத்த விசாரணையில் தெரிய வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன  மனைவி
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன மனைவி
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
Muzaffarnagar crime : திருமணம் செய்ய வற்புறுத்தல்.. பாலியல் வன்கொடுமை..  எரிந்த நிலையில் மண்டை ஓடு! அதிர்ந்த உ.பி
Muzaffarnagar crime : திருமணம் செய்ய வற்புறுத்தல்.. பாலியல் வன்கொடுமை.. எரிந்த நிலையில் மண்டை ஓடு! அதிர்ந்த உ.பி
One Year Of TVK Vijay: தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் - விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் - தமிழக அரசியலில் தாக்கம்?
One Year Of TVK Vijay: தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் - விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் - தமிழக அரசியலில் தாக்கம்?
Embed widget