abp live

நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வதன் அவசியம்?

Published by: ஜான்சி ராணி
abp live

தலைமுடியை சீர்செய்தல், சுத்தமான அழகான ஆடைகளை அணிதல், மேக்கப் போடுதல் போன்ற விஷயங்கள் மட்டுமே மேம் படுத்துதல் அல்ல. உங்களுடைய குணாதிசயங்கள், ஆளுமை பண்புகள், அணுகுமுறை ஆகியவற்றை மெருகேற்றிக்கொள்வதும் அதில் அடங்கும்.

abp live

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். உங்களுக் கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். அதை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள். உடை அணிவது, பேசுவது, செயலாற்றுவது போன்றவற்றில் உங்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றுங்கள்.

abp live

உங்களுடைய மிகப் பெரிய ஆளுமைப்பண்பு எது என்று கண்டறியுங்கள். அதைக்கொண்டு உங்கள் வாழ்க்கை நிலையை மெருகேற்றிக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆளுமையை மேம்படுத்திக்கொள்வதற்கு முக்கிய மான வழி, உங்களுடைய தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்வதாகும். சிறந்த தகவல் தொடர்பு முறை உங்களை பல்வேறு வகைகளில் உயர்த்தும். உங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும்.

குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய குறைகளை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதை உங் களுக்காக மட்டுமே செய்யுங்கள். மற்றவர்கள் சொல் வதற்காகவோ, சமூகத்தின் பார்வையை தவிர்ப்பதற் காகவோ செய்யாதீர்கள். நீங்கள், நீங்களாக இருப்பது தான் உண்மையான அழகு.

உங்களுக்கென்று ஒரு இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். அதை அடைவதற்கான வழிகளை படிப்படியாக திட்டமிடுங்கள். இலக்கை நோக்கி பயணிக்கும்போது தேவையற்ற விஷயங்களில் மனம் செல்லாது.

பொறுமையை கடைப்பிடியுங்கள். உங்கள் முயற்சிகளுக்கான பலன் ஒரே இரவில் கிடைத்துவிடாது. உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்வது என்பது படிப்படியாக நடக்கும் செயல்முறையாகும்.

பொறுமையாக இருக்கும்போது கற்றுக்கொள்வதற்கும் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும் வாய்ப்புகளை உங்களால் எளிதாக கண்டறிய முடியும்.

ஆல் தி பெஸ்ட்!