மேலும் அறிய
Advertisement
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி
சென்னை-பெங்களூரு bதசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம் மாவட்டம் பெங்களூரு அடுத்த வசு கோட்டா தாலுக்காவை சேர்ந்த ராஜசேகர் ( 29 ) என்பவர்
பெங்களூரில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விடியற் காலை வந்துள்ளார். லோடு இறக்கி விட்டு வியாபாரியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பெங்களூர் நோக்கி சென்றுள்ளார்.
லாரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளைச் சத்திரம் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது, பதிவு எண் இல்லாத காரில் வந்த 4 மர்ம நபர்கள் லாரியின் குறுக்கே காரை நிறுத்தியுள்ளனர். அதிர்ச்சியுற்ற ராஜசேகர் லாரியை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார்.
காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் லாரியின் இடது பக்க கண்ணாடியை உடைத்து லாரி டிரைவர் ராஜசேகரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.3.50 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பினர். நீண்ட நேரம் அதிர்ச்சியிலிருந்து மீளாத ராஜசேகர் பின்னர் சுதாரித்துக் கொண்டு காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட தாலுகா காவல் துறையினர் தனிப்படை அமைத்து வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபகாலமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது லாரியை கடத்துவது, லாரியில் வரும் பொருட்களை கடத்துவது , பணம் வழிப்பறி செய்வது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் பணியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion