மருத்துவமனையில் ரகளை.. பிடிக்க சென்ற போலீஸ்.. விழுந்ததில் மாவு கட்டு..
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் கைது.
மருத்துவமனையில் அவதி
மருத்துவமனையில் அராஜகம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கால் முறிவுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்பொழுது கால் முறிவால் வேதனை அடைந்த இளைஞர்கள், வலி தாங்க முடியாமல் இருந்த அப்பா, மகள் பார்த்து,ஏன் இவர்களுக்கு தேவையில்லாத வேலை என பேசிக்கொண்டே சென்றனர்.
தொடரும் குட்டி ரவுடிகள் அட்டகாசம்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்கள் நாளடைவில், அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு தவறான பாதைக்கு சென்று வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சிறு சிறு திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இதுபோன்ற இளைஞர்கள் நாளடைவில் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களிலும் ஈடுபட துவங்குகின்றனர். காவல்துறையினரும் கஞ்சாவ ஒழிப்பை, முறையான கண்காணிப்புகள் செய்யாததால் கஞ்சா விற்பனை என்பது சர்வ சாதாரணமாக கிடைத்து வருகிறது.
கடுமையான நடவடிக்கை
இதுகுறித்தும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்த நிலையிலும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. இதன் காரணமாகவே பல்வேறு குட்டி ரவுடிகள் உருவாகுவதும் , அவர்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுப்பது மட்டுமில்லாமல் இது போன்ற நபர்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும் என்பதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.