மேலும் அறிய
Crime: பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியர் கொலை - மிளகாய் பொடியை தூவிய மர்மநபர்
பண்ருட்டி அருகே கரும்புத் தோப்பில் பிணமாக கிடந்த ரேஷன் கடை ஊழியர். மிளகாய் பொடிகளை தூவிவிட்டு சென்ற நபர்கள்.

கொலை செய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு புது காலனி கிராமத்தைச் சேர்ந்த திலிப்குமார் வயது 59. இவருக்கு அஞ்சலை என்ற மனைவி, வினோத்குமார் என்ற மகனும் ராதிகா, வினித்தா என்ற இரு மகள்களும் இருக்கின்றனர். இவர் வல்லம் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள நிலம் வழியாக தோப்புக்கு சென்றுள்ளார். இரவு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுத்து பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் செல்போன் காணவில்லை இந்த நிலையில் திலிப்குமார் உடலை சுற்றி மிளகாய் தூள்கள் போடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து பண்ருட்டி உட் கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயின்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பண்ருட்டி அருகே அரசு ஊழியர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















