கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - புதுச்சேரியில்அதிர்ச்சி
நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து, மதுபானம் கொடுத்து 3 பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சகோதரியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர், தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். பணம் இல்லாததால் செய்வதறியாது குழம்பி நின்ற பெண்ணை, ஆட்டோ ஓட்டுநர் சாதிக் பாட்சா என்பவர் முதலியார்பேட்டை அருகே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் சத்தம் போடவே, ஆட்டோ ஓட்டுநர் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த 3 பேர், அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து அவரை அருகே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு 2 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து, மதுபானம் கொடுத்து 3 பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே 3 பேரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கிருந்து வெளியேறிய இளம்பெண் அங்குள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த முதலியார்பேட்டை காவல் துறையினர், விசாரித்த போது அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தினேஷ், அரவிந்தன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாதிக்பாட்ஷா ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
பாலியல் வன்முறை :
பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி,மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே.