கரூர்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - காரணம் என்ன?
வருகிற 13-ந் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளதால் விமலா வீட்டில் இருந்து படித்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
பிளஸ் 2 மாணவி வாலிபர் சாவு
வெள்ளியணை, கரூர் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர். பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது..
வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி ஊராட்சி துளசிகொடும்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி தேவி. இத்தம்பதியின் மகள் விமலா 17. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வருகிற 13-ந் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளதால் விமலா வீட்டில் இருந்து படித்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விமலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வயிற்று வலி சரியாகவில்லை.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் விமலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விமலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வாங்கல் முனியப்பனூரை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் பிரவீன் 24. இவர் அரசு தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்துவந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன் வெகு நேரமாக தனது செல்போனில் பேசி கொண்டிருந்தனர். இதனால் அவரை ராஜி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவீன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிரவீனின் உடலைகைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.