”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!
ஆந்திராவில் பெற்றோர்கள் முடிவுசெய்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த பெண்ணினை உயிருடன் எரித்த குடும்பத்தினரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பல்வேறு வழிகளில் தினமும் அரங்கேறி வருகிறது. அதிலும் சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்த எந்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதனை மறுத்து அடக்குமுறைகளை கையாள்கின்றனர் குடும்பத்தினர்கள். குறிப்பாக பெண் ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தால் போதும், உடனே ஆணவக்கொலை செய்யும் நிகழ்வுகள் அரங்கேறிவிடுகிறது. இதனை எதிர்த்து எத்தனை சட்டப்போராட்டங்கள் நடைபெற்றாலும் எந்த பலனும் இல்லை என்றே சொல்லலாம்.
இப்படி ஒரு சம்பவம் தான் இன்று ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதப்பள்ளி என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. 20 வயதான பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் பார்க்கும் எந்த பையனையும் பிடிக்கவில்லை எனவும், திருமணத்திற்கு தொடர்ச்சியாக அந்த பெண் நோ சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், பெண்ணினை உயிருடன் தீயிட்டு எரித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்குப்போராடிய பெண்ணினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெண்ணினை உயிரோடு எரித்த அவரது தாய், தந்தை மற்றும் சகோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய Rayachiti circle காவல் ஆய்வாளர் ராஜூ தெரிவிக்கையில், 20 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் அவரை தான் திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்த நிலையில்தான், திருமணத்திற்காக அவர்கள் பார்த்த பையனை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பெண்ணினை உயிருடன் தீயிட்டு எரித்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண்ணினை உயிரோடு குடும்பத்தினரே எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் 4.05 லட்ச வழக்குகளில் 30 சதவீதம் மட்டும் தான் இந்திய தட்டணைச்சட்டத்தின் பிரிவு 498 ஏ இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் 2021 மார்ச் மாதம் வரை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பாக 1463 புகார்கள் வந்துள்ளன. இதேப்போன்று கடந்த 2020 ஏப்ரல் மாதம் வரை பல்வேறு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக 25886 புகார்கள் வந்துள்ளனர். இதில் குடும்ப வன்முறை தொடர்பாக 5865 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!