மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில் வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த வடமாநில ரயில் பயணிகளை குறி வைத்து, மயக்க மருந்து கலந்த கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து பணம், உடமைகளை திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றது. ரயிலில் வட மாநில பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகமாகி நட்பு ரீதியாக தாங்களும் அந்த மாநிலத்துக்கு செல்வதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, மயக்க மருந்து கலந்த உணவுப் பொருட்களை கொடுத்து மயங்கியவுடன் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் இருப்பு பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்  சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் இது போன்று மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை திருடும் சம்பவம் அதிகரித்தது. இதையடுத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து பயணிகளின் உடமைகளை திருடும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய இருப்புப்பாதை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பேரில், கோயம்புத்தூர் இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் பிரியாசாய் ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களை ரயில்வே காவல்துறை சைபர் செல் உதவியுடன் மயக்க மருந்து கொடுத்து பொருட்களை கொள்ளையடித்ததாக கருதப்படும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில்  வடமாநில கும்பல் கைது

இந்நிலையில் திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலம் சஹால் ஆரரியா எனும் ஒரே பகுதியைச் சேர்ந்த சல்மான் (27), மன்வார் ஆலம் (25), முகமத் ஆசாத் (32), அப்துல்லா (31), மக்முத் ஆலம் (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் குன்னங்கல்பாளையம் அருகில் உள்ள சூரியா காலனியில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து ரயில் நிலையம், காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.  

ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை - திருப்பூரில்  வடமாநில கும்பல் கைது

இவர்கள் பீகாரில் இருந்து வரும் போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ரூ.100 ரூபாய்க்கு வாங்கி வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து மயக்க பிஸ்கட் கொடுத்து அதன் மூலம் திருடப்பட்ட 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Embed widget