போன வருஷம் அண்ணன்.. நேற்று தம்பி..! படுகொலை செய்யப்பட்ட இருவர்.! முன்பகைக்காக தொடரும் கொலைகள்!
சாமித்துரையின் அண்ணன் சுப்பையா மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் ஏற்கனவே உறவினர்களால் வெட்டி படுகொலை செய்ய நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சாமித்துரையும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் சாமித்துரை (23). இவரது மற்றொரு மகன் சுப்பையா கடந்த வருடம் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் உறவினர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் சாமித்துரை மீது நாங்குநேரி போலீசில் மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக அவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சாமித்துரை வீட்டு முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென சாமித்துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் அலறி துடித்துள்ளார். அப்போது அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர்.

ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அரிவாள் வெட்டினால் படுகாயம் அடைந்த சாமித்துரை ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாமித்துரையை கொலை செய்த கும்பல் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலை செய்யப்பட்ட சாமித்துரைக்கு வீரவ நல்லூரில் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது, இந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவில் சாமித்துரை பேருந்து நிறுத்தத்தில் நின்று அந்த பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த படுகொலை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஊருக்குள் சிறிது தூரம் சென்று நின்றது. மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது தடயங்களையும் சேகரித்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாலை இக்கொலை வழக்கில் தொடர்புடைய நடுநந்தன்குளத்தை சேர்ந்த விக்டர், கோதைசேரியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணன் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சுப்பையாவின் தம்பி சாமித்துரையும் கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















