NEET Paper Leak Mastermind : நீட் வினாத்தாள் லீக் : யார் இந்த மாஸ்டர் மைண்ட் ரவி ஆத்ரி?
NEET Paper Leak Mastermind Ravi Atri: நீட் தேர்வு வினாத்தாளை கசியவிட்டதில் மூளையாக செயல்பட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவி ஆத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வு வினாத்தாள் மட்டுமின்றி, தேர்வுகளில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட வந்த ரவி ஆத்ரியை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வு முறைகேடு:
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, தேர்வில் குளறுபடிகள் இருந்ததாக கூறி பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் , யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் உட்பட் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வினாத்தாள் விற்பனை செய்ததாக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு வினாத்தாளை கடத்தியதில் மூளையாக செயல்பட்டதாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வரும் ரவி ஆத்ரி என்பவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரை தற்போது , உ.பி, காவல்துறையினர் கைது செய்தனர்.
வினாத்தாள் கசிவில் மூளையாக செயல்பட்ட ரவி ஆத்ரி
2007-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து, பாதியில் படிப்பை நிறுத்தினார்.
போட்டி தேர்வு தொடர்பாக, பழைய வினாத்தாளை வைத்து, யூடியூபில் வீடியோ வெளியிட்டு வந்தார்
2012-ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாளை கசிய விட்டமைக்காக கைதானார்.
உத்தர பிரதேச காவல்துறை தேர்வில் வினாத்தாளை கசிய விட்டவர்.
இதுமட்டுமன்றி, ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதிய முறைகேட்டிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போதும், நீட் தேர்வில் கசியவிட்டதில் மூளையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினர், இவரை கைது செய்தனர்.