சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோவில் சிறுவன் கைது!
தரங்கம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த டோனி என்ற 15 வயது சிறுவன் ஒருவன் அதே ஊரை சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிக்கு அருகிலுள்ள வாய்க்காலுக்கு விளையாடுவதால் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அச்சம் அடைந்த சிறுமி அவரின் பெற்றோரிடம் அழுதவாறு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர். இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் நிலையகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தி திருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த சிறுவன் டோனியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து, சீறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவரை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவை அடுத்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த ஐந்து வயது சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குறிப்பாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் முறையாக இயங்காத சூழலில் ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குழந்தைகளை அவர்களது பெற்றோர் கவனமாக கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.