பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு 65 சவரன் நகைகள் கொள்ளை - மயிலாடுதுறையில் துணிகரம்
சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் நகை மற்றும் ஒரு வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் நகை மற்றும் ஒரு வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொள்ளை சம்பவங்கள்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுநாள் வரை ஒரு திருடர்கள் கூட பிடிபடவில்லை என்பதால் சீர்காழி பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நாள்தோறும் இருந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குடிபோதையில் இருந்தவரை தட்டிக்கேட்ட இளைஞர்! பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
இதே மாவட்டத்தில் மயிலாடுதுறை துறையில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதும் அந்த திருட்டு சம்பவங்களை தொடர்புடையவர்களை மயிலாடுதுறை தனிப்பட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்து பொருட்களை மீட்பதும் நடைபெறும் நிலையில் சீர்காழியில் மட்டும் திருட்டை தடுக்கவும் முடியாமல், திருடர்களையும் பிடிக்கமுடியாமல் காவல்துறையினர் இருந்து வருவது சீர்காழி காவல்துறையினர் குறித்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ADMK - BJP: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ரகசிய உறவு தொடர்கிறது - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
பட்டப்பகலில் கொள்ளை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் சின்னசாமி என்பவரின் மகன் 53 வயதான முனியசாமி என்கிற சேகர். இவர் சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சேகர் காலையில் கடைக்கு வந்து விட்ட நிலையில் அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த 65 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து இது குறித்த சேகர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Aishwarya Rajinikanth: தனுஷ் எழுதிய அந்த பாடலால் ஒரு பயனும் இல்லை.. ஐஸ்வர்யா வருத்தம்!
புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி பகுதிகளில் பரவலாக தொடர் திருட்டுகள் அரங்கேறி வரும் நிலையில், இரவு ரோந்துகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி விடுத்தும் காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தற்போது பட்டபகலில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.