Bengaluru-Delhi Flight: நடுவானில் நாப்கின் கேட்டார்...அந்த இடத்தில் தொட்டார்... விமானத்தில் பாலியல் தொல்லை..
விமானத்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணித்த 34 வயது பெண் பயணியை நடுவானில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் 34 வயதுடைய பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அவர் அருகில் 29 வயதுடைய அபிஷேக் குமார் சிங் என்பவர் அமர்ந்துள்ளார். அவர் அந்தப் பெண்ணுடன் சில முறை பேச முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர், விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் அவரின் தோள்களில் சாய்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கூறினார். தன்னிடம் நாப்கின் கேட்டு பேச முயன்றதாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர் மீது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “நான் சோர்வாக இருந்ததால், தூங்கிவிட்டேன். இருப்பினும், சிறிது நேரம் கழித்து, அவர் என்னை தகாத முறையில் தொடுகிறார் என்பதை உணர்ந்து எழுந்தேன். அவரிடம் கத்தினேன், அவர் என்னை தடுத்தார். உடனே, நான் ஒரு விமானப் பணிப்பெண்ணை அழைத்து என்ன நடந்தது என்று கூறினேன். அவர் அந்த நபரை வேறொரு இடத்தில் உட்காரச் சொன்னார். ஆனால் அவன் மறுத்துவிட்டார்” என்று கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள பர்காகோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், அபிஷேக் குமார் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 ஏ பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்